Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ADDED : ஜூன் 17, 2024 09:22 PM


Google News
Latest Tamil News
ஜூன் 18, 1918

தஞ்சாவூர், ராஜகிரியில், காதர் பாட்ஷா - கதீஜா பீவி தம்பதியின் மகனாக, 1918ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.ஓ.கே.உபைதுல்லா. சென்னை முகம்மதியா கல்லுாரி, ஜமாலியா அரபி கல்லுாரியில் படித்தார். மலேஷியா சென்று, பை விற்கும் தொழில் செய்தார்.

'சிரம்பான் வர்த்தமானி, சிரம்பான் நியூஸ்' பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். சுபாஷ் சந்திரபோசின், 'ஆசாத் ஹிந்து இயக்க'த்தில் சேர்ந்து, இந்திய, மலேஷிய விடுதலைக்கான போராட்டத்தை துவக்கினார். இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்று, கைதானார்.

கோலாலம்பூர் சென்று, விமானம், கப்பல் சரக்கு ஏற்றுமதி நிறுவனத்தை துவக்கினார். மலாயா இந்திய காங்கிரஸ் சார்பில், மலாயா பெடரல் சட்டசபை உறுப்பினராகி, பார்லிமென்ட் தலைவராகவும் உயர்ந்தார். மலேஷியாவில், ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடக்க காரணமானார். 'டத்தோ, டான் ஸ்ரீ, மால் ஹிஜ்ரா' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 91வது வயதில், 2009, ஜனவரி 22ல் மறைந்தார்.

அலைகடலுக்கப்பால் ஆளுமை செலுத்திய தமிழர் பிறந்த தினம் இன்று!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us