'கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்'
'கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்'
'கொலை வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்'
ADDED : ஜூலை 08, 2024 04:36 AM

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, உ.பி.,யில் இருந்து நேற்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வந்தார்.
அஞ்சலி செலுத்திய பின் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்டது, ஒட்டு மொத்த தலித் மக்கள் மீதான வெறுப்பை காண்பித்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வர் ஸ்டாலின் கவனமாக செயல்பட வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும். அதுவே, தலித் மக்களுக்கு கிடைக்கும் நியாயமாக இருக்கும்.
இந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். கட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.
கட்சித் தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.