அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்றது ஆங்கிலம், ஸ்பானிஷ்: அண்ணாமலை
அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்றது ஆங்கிலம், ஸ்பானிஷ்: அண்ணாமலை
அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்றது ஆங்கிலம், ஸ்பானிஷ்: அண்ணாமலை
ADDED : மார் 14, 2025 12:40 AM
சென்னை:'அமைச்சர் தியாகராஜனின் மகன்கள் கற்ற இரு மொழிகளில், முதலாவது ஆங்கிலம். இரண்டாவது பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ். இதுதான், உங்க இருமொழிக் கொள்கையா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நான் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் தியாக ராஜன் அளித்திருக்கும் பதிலை கேட்டேன். 'தன் இரு மகன்களும் இருமொழிக் கொள்கையில் தான் படித்தனர்' என்று கூறியிருக்கிறார்.
ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை சொல்ல மறந்து விட்டார். அவர் மகன்கள் கற்ற இரு மொழிகளில், முதல் மொழி ஆங்கிலம்.
இரண்டாம் மொழி பிரெஞ்சு அல்லது ஸ்பானிஷ். இதுதான், உங்க இருமொழிக் கொள்கையா?
தமிழகம் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில், ஒரு வெளிநாட்டு மொழியோ, அரசு பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்றுதானே கேட்கிறோம். இதை தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அமைச்சர் தியாகராஜனின் இரு மகன்களும், வாழ்வில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அவர்களுக்கு கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைகளின் குழந்தைகளுக்கும் வழங்கவும் என்றுதான் கேட்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.