Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி 'எஸ்கேப்'

ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி 'எஸ்கேப்'

ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி 'எஸ்கேப்'

ராமர் ஆட்சி குறித்த பேச்சு: செய்தியாளர்களை கண்டதும் சட்ட அமைச்சர் ரகுபதி 'எஸ்கேப்'

ADDED : ஜூலை 24, 2024 07:14 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடந்த கம்பன் கழக விழாவில், ராமர் ஆட்சி பற்றி சட்டத்துறை அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்காமல் சென்று விட்டார்.

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற கம்பன் திருவிழா நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சிதான் என்று கூறியதோடு ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம்,'' என்று கூறிச் சென்றார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் 'இதை புரிந்து கொள்வதற்கு தி.மு.க.,வுக்கு இவ்வளவு காலம் ஆகி உள்ளது. இவ்வளவு காலமாக ராமராஜ்யம் குறித்து, தி.மு.க.,வினர் கூறிய கருத்துக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர், ராமராஜ்யம் குறித்து விளக்கம் அளித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்' என்று கூறினார்.

அதேபோல் பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியும் 'தமிழகத்தில் நடைபெற்று வருவது ராமராஜ்யம் அல்ல; ராவண ராஜ்யம். ராமரை எதிர்த்தவர்கள் அதை மறைத்து பேசத் துவங்கி உள்ளனர்' என்று கூறினார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ராணியார் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று வந்தார் அமைச்சர் ரகுபதி.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சரிடம் 'நீங்கள் ராமர் ஆட்சியின் நீட்சிதான் திராவிட மாடல் ஆட்சி, என்று நேற்று முன்தினம் கூறிய கருத்து சர்ச்சையாகி இருக்கிறதே' என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ''அதனால் தான் செய்தியாளர்களை சந்திக்கவில்லை,'' என்று கோபமாகக் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us