மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்
மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்
மேட்டுப்பாளையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயணம்
ADDED : ஜூன் 08, 2024 10:46 AM

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்திரகாளியம்மன் கோயில் சாலை வழியாக வெள்ளியங்காடு தோலம்பாளையம் வரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன் 08) காலையில் இயற்கை எழில் சூழ்ந்த கிராமப் பகுதிகளில் 21 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டார்.
அமைச்சர் சுப்ரமணியன் தங்களது கிராமப்பகுதிகளில், நடைபயணம் சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற கராத்தே பயிலும் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்தும் அவர் மகிழ்ந்தார்.
அமைச்சருடன், தி.மு.க., காரமடை மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், மாவட்ட பிரதிநிதி கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.