Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ அமைச்சர் அமித் ஷா யாரையும் கண்டிக்க மாட்டார்: அண்ணாமலை அண்ணாமலை சொல்கிறார்

அமைச்சர் அமித் ஷா யாரையும் கண்டிக்க மாட்டார்: அண்ணாமலை அண்ணாமலை சொல்கிறார்

அமைச்சர் அமித் ஷா யாரையும் கண்டிக்க மாட்டார்: அண்ணாமலை அண்ணாமலை சொல்கிறார்

அமைச்சர் அமித் ஷா யாரையும் கண்டிக்க மாட்டார்: அண்ணாமலை அண்ணாமலை சொல்கிறார்

ADDED : ஜூன் 15, 2024 02:30 AM


Google News
சென்னை:''விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க., நின்றாலும், பா.ஜ., நிற்பது போல் தான் எங்களின் வேலை இருக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற முருகன், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயம் வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின், அண்ணாமலை அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில் எங்கள் கூட்டணி அதிக ஓட்டுக்களை வாங்கியது. கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்றாக பேசி முடிவு எடுத்து, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடும் என்று அறிவித்தோம். இந்த தகவல் மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க., நிச்சயம் வெற்றி பெறும். ஈரோடு இடைத்தேர்தல் போல் விக்கிரவாண்டி தேர்தல் இருக்க கூடாது; மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். பா.ம.க., நின்றாலும், பா.ஜ., நிற்பது போல் தான் எங்களின் வேலை இருக்கும். பா.ஜ., முழுவீச்சில் கூட்டணி கட்சி வெற்றிக்காக பணியாற்றும்.

பிரதமர் மோடி, விரைவில் தமிழகம் வருகிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வரும். பா.ஜ.,வை பொறுத்தவரை அனைவரும் குடும்பம். அமித்ஷாவின் பேச்சு என்பது அன்பு, அரவணைப்பு, பாசம் தான். அவர் எங்கேயும் யாரையும் கண்டிக்க மாட்டார். எங்கள் கூட்டங்களில் சாதாரண தொண்டர்கள் கூட தைரியமாக கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னையில் தமிழிசை வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us