Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ வரி ஏய்ப்பை தடுக்க அமைச்சர் அறிவுரை

வரி ஏய்ப்பை தடுக்க அமைச்சர் அறிவுரை

வரி ஏய்ப்பை தடுக்க அமைச்சர் அறிவுரை

வரி ஏய்ப்பை தடுக்க அமைச்சர் அறிவுரை

ADDED : ஜூன் 08, 2024 01:29 AM


Google News
சென்னை:வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், எளிய செயல் திட்டங்கள் வாயிலாக வரி வசூலில் ஈடுபடுவதுடன், வரி ஏய்ப்பை தடுக்க, தீவிர ஆய்வில் ஈடுபடுமாறு, இணை ஆணையர்களை, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசுக்கு, அதிக வருவாய் ஈட்டி தருவதில், வணிக வரித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நிதியாண்டில், 1.26 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ள நிலையில், வணிக வரி துறையின் ஆய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் மூர்த்தி, ஆணையர் ஜெகந்நாதன், கூடுதல் மற்றும் இணை பதிவாளர்கள் பங்கேற்றனர். பின், துறையில், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மூன்று டிரைவர்களுக்கு, அமைச்சர் மூர்த்தி பாராட்டு சான்று வழங்கினார்.

கூட்டத்தில், மூர்த்தி பேசியுள்ளதாவது:

வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், எளிய செயல் திட்டங்கள் வாயிலாக, அதிகாரிகள் வரி வசூலில் ஈடுபட வேண்டும். வரி ஏய்ப்புகளை தகுந்த முறையில் கண்டுபிடித்து, அதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்க செய்ய, தீவிர ஆய்வில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு அதிகாரியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us