Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

102 அடியை நெருங்கும் மேட்டூர் அணை: காவிரியில் 1.42 லட்சம் கனஅடி நீர் திறப்பு

UPDATED : ஜூலை 27, 2024 04:36 PMADDED : ஜூலை 27, 2024 09:38 AM


Google News
Latest Tamil News
தர்மபுரி: கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1.42 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை நெருங்கி உள்ளது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணைக்கு வினாடிக்கு 3,421 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணையின் பாதுகாப்பு நலன் கருதி வினாடிக்கு 3,715 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

அமராவதி அணையின் 90 அடியில் 88 அடிக்கு நீர் நிரம்பிய நிலையில் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 1.42 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

காவிரியில் தொடர்ந்து அதிகப்படியான நீர் வரத்து இருக்கும் நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை நெருங்கி உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 101.70 அடியாக உள்ளது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவகுமார் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர். அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 81,552 கனஅடியில் இருந்து 93,928 கனஅடியாக உயர்ந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us