கோடை நெல் அறுவடை துவக்கம் கர்நாடகா செல்லும் இயந்திரங்கள்
கோடை நெல் அறுவடை துவக்கம் கர்நாடகா செல்லும் இயந்திரங்கள்
கோடை நெல் அறுவடை துவக்கம் கர்நாடகா செல்லும் இயந்திரங்கள்
ADDED : ஜூன் 04, 2024 03:52 AM
மேட்டூர்: கர்நாடகாவில், கோடை நெல் அறுவடை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து அறுவடை இயந்திரங்கள் பாலாறு வழியாக செல்ல துவங்கியுள்ளன.
கர்நடகாவில், குடகு மாவட்டத்தில் காவிரியாறு உற்பத்தியாகி ஹசன், மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து தமிழக எல்லையை அடைகிறது. காவிரி பாயும் மாவட்டங்களில், விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்வது வழக்கம். கடந்த ஆண்டை விட பருவமழை அளவு குறைந்ததாலும் கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்ததாலும் பாசன பகுதியில் குறைவான விவசாயிகளே கோடை நெல் சாகுபடி செய்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. நெல் அறுவடை செய்வதற்காக தமிழகத்தில் சேலம் மாவட்டம், ஆத்துார், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து அறுவடை இயந்திரங்கள் மேட்டூர், கொளத்துார் வழியாக செல்ல துவங்கியுள்ளன.
இந்த இயந்திரங்கள் தமிழக எல்லையிலுள்ள பாலாறு, மாதேஸ்வரன்மலை, கொள்ளேகால் வழியாக மாண்டியா, மைசூரு, ஹசன் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றன. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு கர்நாடகாவில் கோடைநெல் சாகுபடி குறைந்துள்ளதாக அறுவடை இயந்திர ஓட்டுனர்கள் கூறினர்.