/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி சிலை பிரதிஷ்டை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி சிலை பிரதிஷ்டை
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி சிலை பிரதிஷ்டை
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி சிலை பிரதிஷ்டை
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நந்தி சிலை பிரதிஷ்டை
ADDED : ஜூன் 04, 2024 03:51 AM
வீரபாண்டி, ஜூன் 4-
புதிதாக கட்டப்பட்டு வரும், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கருவறையில் பிரம்மாண்ட மூலவர் சிலையை தொடர்ந்து, நேற்று அதன் எதிரே நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடியில் கடந்தாண்டு லட்சுமிநாராயண பெருமாள் கோவில், 100 நாட்களில் கட்டி கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதன் பின், அதே பகுதியில் சிவாலயம் ஒன்று கட்ட வேண்டும் என முடிவு செய்து, அதற்கு ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் என்று பெயரும் வைத்து, கடந்தாண்டு ஏப்ரலில் கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது.
கோவில் கருவறை கட்டும் முன்பே, ஏழு அடி உயரம், ஏழு அடி சுற்றளவில் மொத்தமாக, 4 டன் எடையுள்ள பிரம்மாண்ட சிவலிங்கம் கடந்தாண்டு செப்டம்பரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, கருவறை உள்ளிட்ட பரிவார தெய்வ சன்னதிகள் கட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில் மூலவர் ஏகாம்பரேஸ்வர் எதிரே பெரிய நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்காக நந்தி சிலை அமையுள்ள இடத்தை சுத்தம் செய்து, பீடம் பகுதியில் மண் கொட்டி சமன்படுத்தினர். கிரேன் மூலம் நந்தி சிலையை துாக்கி வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு நேற்று முன்தினம் காலை பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் செய்து, மலர் மாலைகளால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.