'சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக வேண்டும்!'
'சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக வேண்டும்!'
'சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக வேண்டும்!'
ADDED : ஜூலை 08, 2024 05:46 PM
சென்னை:
''தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக காவல் துறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனராக அருண், கூடுதல் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி வரும் காலங்களில், அரசுக்கு எவ்விதமான கெட்டப் பெரும் ஏற்படாமல், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, பல கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பேச்சு அதிகரித்துள்ள நிலையில், படுகொலை சம்பவம் அரங்கேறி உள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதை பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***