/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து 'அட்மிட்' டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து 'அட்மிட்'
டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து 'அட்மிட்'
டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து 'அட்மிட்'
டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து 'அட்மிட்'
ADDED : ஜூலை 08, 2024 05:47 PM
சென்னை:
அரும்பாக்கம், ராணி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் துரைராஜ், 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் டேனியல், 15, அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில். 10ம் வகுப்பு படிக்கிறார்.
சிறுவன், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகில் உள்ள சுவரின் மீது, செருப்பை துாக்கி வீசி விளையாடினான். அப்போது, அங்குள்ள மின்மாற்றிக்குச் செல்லும் மின்வடத்தின் மீது, செருப்பு மாட்டிக் கொண்டது.
ஆபத்தை உணராமல் சிறுவன், மின்மாற்றியின் மீது ஏறி, செருப்பை எடுக்க முயன்றுள்ளான்.
அப்போது, சிறுவனின் கால்கள் மின்வடங்களில் பட்டு உரசியதில், தீப்பொறி ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சிறுவனின் தலை, கை மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
காயங்களுடன் அலறிய சிறுவனை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிறுவன், 25 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.