விருதுநகர் வாலிபர் கொலை கரூர் காதலி கைது
விருதுநகர் வாலிபர் கொலை கரூர் காதலி கைது
விருதுநகர் வாலிபர் கொலை கரூர் காதலி கைது
ADDED : ஜூன் 17, 2024 12:40 AM
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் 27, லாட்ஜ் அறையில் இறந்த நிலையில் கிடந்தார். சந்தேக மரண வழக்காக பதியப்பட்ட நிலையில் விசாரணையில் கொலையாக மாற்றப்பட்டுகரூரைச்சேர்ந்த காதலி நந்தினி 24, கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவர் டிப்ளமோ முடித்து திருப்பூரில் டிரைவராக பணிபுரிந்தார். இவருக்கும் கரூரைச் சேர்ந்த நந்தினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. நந்தினி திருப்பூர் மசாஜ் சென்டரில் பணிபுரிகிறார். இதுகுறித்து காசி விஸ்வநாதன், தாய் செல்வராணியிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காசி விஸ்வநாதன் ஜூன் 9 ல் திருப்பூரில் இருந்து விருதுநகருக்கு வந்தார். இவர் ஜூன் 12 மதியம் நண்பர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றார். ஜூன் 13ல் திருப்பூரில் இருந்து விருதுநகருக்கு வந்த நந்தினியை லாட்ஜில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். வீட்டிற்கு சென்று தாய் செல்வராணியிடம் நடந்தை கூறி இருவருக்கும் உணவு சமைத்து தர கேட்டு எடுத்து சென்றுள்ளார்.
ஜூன் 14 இரவு 9:00 மணிக்கு லாட்ஜ் அறையில் காசி விஸ்வநாதன் முக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். உடன் தங்கியிருந்த நந்தினியை காணவில்லை. இது தொடர்பான விசாரணையில் நேற்று நந்தினியை கிழக்கு போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், லாட்ஜில் தங்கிய இருவரும் ஒன்றாக மது குடித்த போது வாக்குவாதம் முற்றியது. அப்போது காலுக்கு கட்டுப்போடும் பேண்டேஜ் துணி வைத்து காசி விஸ்வநாதனை கழுத்தை நெறித்து நந்தினி கொலை செய்துள்ளார் என்றனர்.