சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ADDED : ஜூன் 17, 2024 12:41 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்காக ஜூன் 19 முதல் 21 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் ஜூன் 19ல் ஆனி மாத பிரதோஷம், 21ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு ஜூன் 19 முதல் 21 வரை 4 நாட்கள், தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வனம் மற்றும் வனப்பகுதி நலன் கருதி பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பக்தர்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.