ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம்: மத்திய அமைச்சர் கடும் தாக்கு
ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம்: மத்திய அமைச்சர் கடும் தாக்கு
ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம்: மத்திய அமைச்சர் கடும் தாக்கு
ADDED : ஆக 02, 2024 11:55 AM

புதுடில்லி: 'ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன்' என மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தெரிவித்தார்.
' தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சி நடக்கிறது' என காங்., எம்.பி., ராகுல் குற்றம் சாட்டினார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: பார்லிமென்டில் ராகுல் பொய் பேசுகிறார். வெளியே, அவர் தவறான தகவல்களை பரப்புகிறார்.
அரசியலமைப்பு சட்டம்
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது நாட்டின் துரதிர்ஷ்டம் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சி நடந்து வருவதாக கூறி வந்த ராகுல், தற்போது அந்த முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார். பார்லிமென்டில் விவாதத்தின் போது அனுராக் தாக்கூர் எழுப்பிய, கேள்விகளுக்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.