மலபார் கோல்டு அண்டு டைமண்ட்சில் 'நுவா' டைமண்ட்ஸ் கலெக் ஷன் அறிமுகம்
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்சில் 'நுவா' டைமண்ட்ஸ் கலெக் ஷன் அறிமுகம்
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்சில் 'நுவா' டைமண்ட்ஸ் கலெக் ஷன் அறிமுகம்
ADDED : ஜூன் 29, 2024 01:06 AM

சென்னை:உலகளவில் ஆறாவது பெரிய தங்கம், வைர நகை விற்பனையாளரான மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ், ஐக்கிய அரபு நாட்டில் நடந்த நிகழ்வில், 'நுவா' என்ற பெயரில் வைர நகை தொகுப்பை வெளியிட்டது. இந்த நகை கண்காட்சியை நடிகை கரீனா கபூர் கான் துவக்கி வைத்தார். இந்த நகைகள், இந்தியாவின் உள்ள அனைத்து மலபார் கடைகளிலும் கிடைக்கும்.
நுவா நகை தொகுப்பு, ஆடம்பரமான வைர நகைகளாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்சில் உள்ள அனைத்து வைர நகைகள் போலவே, மலபார் வாக்குறுதிகளான பொறுப்புடன் பெறப்பட்ட இயற்கை வைரங்கள் பரிசோதிக்கப்பட்டு மற்றும் சான்றளிக்கப்பட்ட வைரங்கள், 100 சதவீதம் எக்ஸ்சேஞ்ச் மதிப்பு, வெளிப்படைத்தன்மை, உத்தரவாதமான வாங்குதல் போன்ற உத்தரவாதத்துடன் நுவா நகை வருகிறது.
மலபார் குழுமத்தலைவர் எம்.பி.அகமது கூறியதாவது:
இயற்கை மற்றும் பெண்களின் மனம் தளராத மனப்பான்மை, இரண்டையும் கொண்டாடும் நுவா தொகுப்பை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும், இயற்கையின் சிக்கலான அழகையும், பெண்களின் நெகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிற விதத்தில், மிகுந்த கவனத்துடனும், துல்லியத்துடனும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
கரினா கபூர் கான் இந்த நகை தொகுப்பை அறிமுகம் செய்தது, எங்களுக்கு பெருமை. ஏனெனில், அவர், நுவா என்பதன் அருளையும், பிரமிப்பையும் முழுதுமாக பிரதிபலிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.