பெண் எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; பா.ஜ., தலைவருக்கு 'காப்பு'
பெண் எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; பா.ஜ., தலைவருக்கு 'காப்பு'
பெண் எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; பா.ஜ., தலைவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 23, 2024 11:45 PM

சிவகங்கை : சிவகங்கை கோட்டை முனீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து எஸ்.ஐ., அழகுராணி வாகன சோதனையில் ஈடுபட்டார். அவ்வழியாக பா.ஜ., நகர தலைவர் உதயா காரில் வந்தார்.
காரை நிறுத்திய எஸ்.ஐ., 'சீட்பெல்ட்' அணிய வேண்டும். நம்பர் பிளேட்டை விதிமுறைப்படி பொருத்த வேண்டும் என, கூறினார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பா.ஜ., நகர தலைவர் பணி செய்யவிடாமல் தடுத்து, தரக்குறைவாக பேசியதாக வீடியோ ஆதாரத்துடன் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷிடம், அழகுராணி புகார் அளித்தார். நேற்று மதியம் குடும்பத்துடன் காரில் கீழடி சென்ற உதயாவை, சக்குடியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமையில் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர்.