மகனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி
மகனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி
மகனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி
ADDED : ஜூன் 23, 2024 11:46 PM
தலைவாசல் : சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வரகூர் ஊராட்சி, அம்மன் நகரை சேர்ந்தவர் ஆதிமூலம், 57; ஆத்துார் மின்வாரிய தெற்கு அலுவலக ஒயர்மேன். இவரது மனைவி வளர்மதி, 47. இவர்களின் மகன் கலைச்செல்வன், 19; தனியார் கல்லுாரி மாணவர். சில ஆண்டுகளாக தம்பதி இடையே குடும்ப தகராறு இருந்தது. நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த வளர்மதி, மகனுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் ஆதிமூலத்தை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ஆதிமூலம் இறந்தார். காயமடைந்த வளர்மதி, கலைச்செல்வன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.