இந்தியா வல்லரசாக மாறும்: பா.ஜ., நிர்வாகி நம்பிக்கை
இந்தியா வல்லரசாக மாறும்: பா.ஜ., நிர்வாகி நம்பிக்கை
இந்தியா வல்லரசாக மாறும்: பா.ஜ., நிர்வாகி நம்பிக்கை
ADDED : ஜூன் 03, 2024 06:31 AM

கோவை : ''சர்வதேச அளவில் மிகப்பெரிய வல்லரசாக, நம் நாடு விரைவில் மாறும்,'' என, பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறும் சூழலில், பிரதமர் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பொறுப்பாளருமான சுதாகர் ரெட்டி, வேள்வி மற்றும் கோ பூஜை செய்தார்.
கோவை கணபதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே, சிறப்பு ஹோமம் நடந்தது. மஹா கணபதி, சுதர்சனம், மஹாலட்சுமி, சத்ருசம்ஹார ஹோமங்கள் நடந்தன.
இதில் பங்கேற்ற சுதாகர் ரெட்டி, நிறைவாக கோமாதாவுக்கு பூஜை செய்து வஸ்திரங்களையும், மாலைகளையும் சமர்ப்பித்து வழிபட்டார்.
பின் சுதாகர் ரெட்டி கூறுகையில், ''பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்போம். உலக அரங்கில் நம் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் மிகப் பெரிய வல்லரசாக நம் நாடு விரைவாக மாறும். பிரதமர் மோடி தலைமையிலான அரசால் மட்டுமே, அதை நிறைவேற்ற முடியும்,'' என்றார்.