Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பி.டெக்., பாடத்தில் இனி 'இன்டெர்ன்ஷிப்!'

பி.டெக்., பாடத்தில் இனி 'இன்டெர்ன்ஷிப்!'

பி.டெக்., பாடத்தில் இனி 'இன்டெர்ன்ஷிப்!'

பி.டெக்., பாடத்தில் இனி 'இன்டெர்ன்ஷிப்!'

ADDED : ஜூன் 12, 2024 12:39 AM


Google News
சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஸ்டார்ட் அப்' துவங்குவதற்கான, 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி., செய்திக்குறிப்பு:

சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் அளித்த விரிவான கருத்துகளுக்கு பின், பி.டெக்., பாடநெறி கால அளவு சீரமைக்கப்பட்டு, பட்டப்படிப்பு பாட நேரம், 436 மணியில் இருந்து, 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கற்பித்தல் நேரத்தில், 40 சதவீதம் கற்றல் அனுபவத்துக்கான, 'இன்டெர்ன்ஷிப்' பயிற்சிக்கு ஒதுக்கப்படும். மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திட்டங்களில் இருந்து, முன்கூட்டியே வெளியேறவும் அனுமதிக்கப்படுவர்.

வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவனம் அளித்த பரிந்துரைகளை தொடர்ந்து, இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி கூறுகையில், “புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோருக்கு, சென்னை ஐ.ஐ.டி.,யில் முக்கியத்துவம் அளிக்கப்படும். கடந்த நிதியாண்டில், மூன்று நாட்களுக்கு ஒரு ஸ்டார்ட் அப் துவங்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us