/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு
ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு
ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு
ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு
ADDED : ஜூன் 12, 2024 12:39 AM
திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்தவர், மெகபூப் பாஷா 55, நேற்று முன்தினம், இவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். மெகபூப் பாஷாவை, அவரது மகன் இஜாஸ் அஹமது, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மெகபூப் பாஷா உயிரிழந்துள்ளதாக தெரிவித்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த இஜாஸ் அஹமது, பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என, மருத்துவமனையின் கண்ணாடி மற்றும் கதவினை உடைத்து தகராறு செய்துள்ளார்.
திருவல்லிக்கேணி போலீசார், இஜாஸ் அஹமதுவிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.