Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விண்வெளி மைய நுண்ணுயிரிகள் குறித்து நாசாவுடன் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

விண்வெளி மைய நுண்ணுயிரிகள் குறித்து நாசாவுடன் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

விண்வெளி மைய நுண்ணுயிரிகள் குறித்து நாசாவுடன் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

விண்வெளி மைய நுண்ணுயிரிகள் குறித்து நாசாவுடன் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி

ADDED : ஜூன் 11, 2024 01:51 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில், சர்வதேச விண்வெளி மையத்தில் பரவியிருக்கும் நுண்ணுயிரிகள் குறித்து, நாசாவுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

இவற்றுக்கான, அனைத்து முன் எச்சரிக்கை மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதேநேரம், விண்வெளி மையத்தில் மருந்து எதிர்ப்பு கிருமிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யும், நாசாவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகமும் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலைய மருந்து மற்றும் நோய்க்கிருமிகள் குறித்து ஆய்வை துவங்கியுள்ளன.

சர்வதேச விண்வெளி மையத்தில், மனிதர்களுக்கு நேரடியாக தீங்கு இழைக்காத வகையில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளின் தன்மை குறித்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு, சர்வதேச விண்வெளி மையத்தை சுற்றியிருக்கும் நுண்ணுயிரிகளை, ஐ.ஐ.டி.,யின் விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது.

வாத்வானி ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ் அண்டு செயற்கை நுண்ணறிவின் தரவு அறிவியல் பிரிவு பேராசிரியர் கார்த்திக் ராமன், ஐ.ஐ.டி. விஞ்ஞானி கஸ்துாரி வெங்கடேஸ்வரன், ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சென்குப்தா, ஷோபன் கார்த்திக், நாசாவின் நிதின் குமார் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் வீரர்கள், தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் தாக்கத்தை எதிர்கொள்ளும் யுக்திகளை வடிவமைக்கவும், இந்த ஆராய்ச்சி உதவும். இந்த ஆராய்ச்சியின் பயனால், விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் மேம்படும் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us