Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பள்ளி தாளாளர் முன்ஜாமின் மனு போலீஸ் உதவி கமிஷனர் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி தாளாளர் முன்ஜாமின் மனு போலீஸ் உதவி கமிஷனர் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி தாளாளர் முன்ஜாமின் மனு போலீஸ் உதவி கமிஷனர் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி தாளாளர் முன்ஜாமின் மனு போலீஸ் உதவி கமிஷனர் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 06, 2024 02:40 AM


Google News
மதுரை:மதுரையில் பள்ளி நிர்வாக பிரச்னையில் ஆசிரியை பாலியல் புகாரில் பதிவான வழக்கில் தாளாளர், தலைமையாசிரியை முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். வழக்கு பதிவில் தாமதம் குறித்து தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை நரிமேடு நேரு வித்யாசாலை பள்ளியில் உபரி ஆசிரியர்கள் சிலர் இருந்ததால் இதர பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இடமாறுதல் செய்தது. மீண்டும் அவர்கள் நேரு வித்யாசாலை பள்ளிக்கு திரும்பினர். தாளாளர் சேத் டேனிராஜ் அனுமதிக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தலையிட்டதால் ஒரு ஆசிரியை அனுமதிக்கப்பட்டார். அவரை சட்டவிரோதமாக தடுத்து, ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்து, வன்கொடுமை செய்ததாக சேத் டேனிராஜ் உட்பட சிலர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர். பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மற்றொரு புகாரில் வழக்கு பதிந்தனர்.

சேத் டேனிராஜ், அவரது மனைவி இளமதி, தலைமையாசிரியை ேஹமா அருளானந்தம், ஆசிரியைகள் ஷகிலா, ஜூலியட் செல்வகுமாரி, ஜெயபாலா செல்வ சுதா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: ஒரு ஆசிரியரின் உறவினர் பிரேமா. பள்ளி நிர்வாகியாக இருந்தார். அவர் நீக்கப்பட்டார். அவர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருடன் கூட்டுச் சேர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை எங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி பி.புகழேந்தி: கீழமை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் வழக்கு ஆவணங்களுடன் இன்று (ஜூன் 6) இந்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us