/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரங்கபூபதி கல்லுாரியில் பொது மருத்துவ முகாம் ரங்கபூபதி கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
ரங்கபூபதி கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
ரங்கபூபதி கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
ரங்கபூபதி கல்லுாரியில் பொது மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 06, 2024 02:39 AM

செஞ்சி: ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி நர்சிங் கல்லுாரி சார்பில், வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஊராட்சி தலைவர் மாரியம்மாள் மாணிக்கம் தலைமை தாங்கினார். பேராசிரியர் மாலதி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் ஸ்ரீபதி முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் சக்திவேல் கண்ணன் தலைமையிலான குழுவினர் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சையளித்தனர். தி.மு.க., அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், கல்லுாரி பேராசிரியர்கள் ஜீவரேகா, சவுந்தரியா, அருணா, ரூபி, லாவண்யா, ஷமிரா மற்றும் நர்சிங் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.