ADDED : ஜூன் 03, 2024 05:54 AM
போலீசாரிடம் குறைகளை கேட்ட போது, பணிச்சூழல் காரணமாக, மன அழுத்தம், குடும்பப் பிரச்னை, குடி போதைக்கு அடிமையாதல், தற்கொலை எண்ணம் அதிகமாதல், கோபப்படுதல் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களில் மீள முடியாமல் தவிப்பது தெரியவந்தது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், 'கவுன்சிலிங்' தரவும், 2021ல், 'காவல் நலவாழ்வு 2.0' என்ற திட்டம் துவங்கப்பட்டது. பின், 2022ல், அந்த திட்டம், 'மகிழ்ச்சி' என, பெயர் மாற்றப்பட்டது. திட்டத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்படும், நிம்ஹான்ஸ் என்ற, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தார் இணைந்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவ உளவியலாளர்கள், உதவியாளர்களும் உள்ளனர். அவர்கள், தமிழக காவல் துறையில் மண்டல வாரியாக கவுன்சிலிங் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அதற்கான மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக, மகிழ்ச்சி திட்டத்திற்கான ஆலோசனை மையம் சென்னையிலும், மதுரையிலும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில், மேற்கு மண்டல போலீசாருக்கு, கோவையில் மகிழ்ச்சி திட்டத்திற்கான மையம் திறக்கப்படும்.
- சங்கர் ஜிவால்,தமிழக டி.ஜி.பி.,