மானியத்துடன் 'கிரீன் எனர்ஜி' திட்டம் பின்னலாடை துறையின் எதிர்பார்ப்பு பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்பு
மானியத்துடன் 'கிரீன் எனர்ஜி' திட்டம் பின்னலாடை துறையின் எதிர்பார்ப்பு பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்பு
மானியத்துடன் 'கிரீன் எனர்ஜி' திட்டம் பின்னலாடை துறையின் எதிர்பார்ப்பு பின்னலாடை துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 21, 2024 02:59 AM
ADDED : ஜூலை 21, 2024 02:49 AM

திருப்பூர்:மின் கட்டண சுமை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மானியத்துடன் கூடிய 'கிரீன் எனர்ஜி' திட்டத்தை, பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென, தமிழக தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 55 சதவீத பங்களிப்புடன் திருப்பூர் முன்னிலையில் இருக்கிறது. இங்குள்ள அனைத்து வகையான தொழில்களும், மின்சாரத்தை மட்டுமே நம்பிஇருக்கின்றன.
தொழில் இயக்க செலவில், மின் கட்டண செலவு மட்டும், 30 சதவீதம் ஏற்படுகிறது.
தொடர்ச்சியான மின் கட்டண உயர்வுகளால், இத்தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதேநிலை நீடித்தால், பல்வேறு மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூர் பனியன் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.
எனவே, மின்சாரத்துக்கு மாற்றாக, மரபுசாரா எரிசக்தி உற்பத்தி திட்டத்தை, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என, தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:
மின் கட்டண உயர்வால், சுத்திகரிப்பு செலவு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அடிக்கடி மின் கட்டணம் உயர்ந்தால், தொழில் நடத்த இயலாது. மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய, 'கிரீன் எனர்ஜி' திட்டத்தை, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
இதனால், மின் கட்டண சுமையும் குறையும். தமிழக தொழில்களை காப்பாற்ற, மானியத்துடன் கூடிய புதிய மரபுசாரா எரிசக்தி திட்டத்தை, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.