மூலப்பொருட்கள் விலையால் தடுமாறும் 'எலாஸ்டிக்' உற்பத்தி
மூலப்பொருட்கள் விலையால் தடுமாறும் 'எலாஸ்டிக்' உற்பத்தி
மூலப்பொருட்கள் விலையால் தடுமாறும் 'எலாஸ்டிக்' உற்பத்தி
ADDED : ஜூலை 20, 2024 02:03 AM

திருப்பூர்:ரப்பர், பாலியஸ்டர் நுால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வால், 'எலாஸ்டிக்' உற்பத்தி தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிலில், எலாஸ்டிக் பயன்பாடு என்பது அத்தியாவசியம்.
திருப்பூரில் மட்டும், 500 எலாஸ்டிக் உற்பத்தி யூனிட்கள் இயங்கி வருகின்றன. முக்கிய மூலப்பொருளாகிய ரப்பர், கேரளா மற்றும் மலேஷியாவில் இருந்து தருவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், 50,000 கிலோ அளவுக்கு, ரப்பர் தேவைப்படுகிறது.
ஒரு கிலோ எலாஸ்டிக் உற்பத்தியில், 600 கிராம் அளவுக்கு பாலியஸ்டர் நுாலும், 400 கிராம் அளவுக்கு ரப்பரும் சேர்க்கப்படுகிறது. ரப்பர் விலையும், பாலியஸ்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மின் கட்டண சுமையும் பேரிடியாய் இறங்கியுள்ளது.
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க செயலர் சவுந்திரராஜன் கூறியதாவது:
உற்பத்தியாளர்கள் கூட்டாக இணைந்து, மலேஷியாவில் இருந்து, மாதாமாதம் ரப்பர் இறக்குமதி செய்கிறோம். கேரளாவில் இருந்தும் ரப்பர் கொள்முதல் செய்கிறோம். கடந்த சில மாதங்களில், ரப்பர் விலை திடீரென கிலோவுக்கு 20 ரூபாய் வரை உயர்ந்துஉள்ளது.
பாலியஸ்டர் நுால் விலையும், கிலோவுக்கு, 8 முதல், 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இவ்வாறு கூறினார்.