Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'கனவு இல்லம்' திட்டத்திற்காக 'பிரதமர் வீடு' திட்டம் முடக்கம்

'கனவு இல்லம்' திட்டத்திற்காக 'பிரதமர் வீடு' திட்டம் முடக்கம்

'கனவு இல்லம்' திட்டத்திற்காக 'பிரதமர் வீடு' திட்டம் முடக்கம்

'கனவு இல்லம்' திட்டத்திற்காக 'பிரதமர் வீடு' திட்டம் முடக்கம்

ADDED : ஜூலை 03, 2024 06:32 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிவகங்கை:தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்திற்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை முடக்குவதாக புகார் எழுந்துள்ளது.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பட்டா நிலத்தில் 270 முதல் 300 சதுர அடியில் வீடு கட்டிக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.1.20 லட்சம் நிதி வழங்குகிறது. வேலை உறுதி திட்டம் மூலம் அந்த வீட்டில் ரூ.12,500 செலவில் கழிப்பிடம் கட்டித்தரப்படும். தமிழகம் முழுதும் பல இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசின் கனவு இல்லம் வருகை


இந்நிலையில் தமிழக அரசு 2030 ம் ஆண்டிற்குள் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் கான்கிரீட் வீடுகள் கட்டும் கனவு இல்லம் திட்டத்தை' அறிமுகம் செய்துள்ளது. நடப்பாண்டு 1 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். ஜூலை 15 க்குள் பயனாளிகளை தேர்வு செய்து வீடு கட்டுவதற்கான அனுமதி கடிதத்தை வழங்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்த அவசர கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது.

இணையதளம் முடக்கம்


பிரதமர் வீடு திட்டத்தில் ஆய்வுக்குப்பின் பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும். வீடு கட்டி முடித்த பயனாளிக்கு மத்திய அரசின் பங்கு தொகை ரூ.1.20 லட்சம் வங்கி கணக்கிற்கே சென்றுவிடும். ஆனால், மாநில அரசின் பங்கு தொகையான ரூ.1.20 லட்சத்தை பெற அதிகாரிகள் ஒரு முனை கணக்கு (சிங்கிள் நோட் அக்கவுண்ட்) இணையதளத்தில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் ஜூன் 11 ல் இருந்து முடக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மார்ச் வரை வீடு கட்டிய பயனாளிக்கு தேர்தல் நடத்தை விதியை கூறி மாநில அரசு பங்களிப்பு தொகை ரூ.1.20 லட்சத்தை விடுவிக்கவில்லை. தற்போது மாநில அரசின் பங்களிப்பு தொகையை இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு ரூ.935 கோடி பாக்கி இருப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us