இலவச ஓட்டுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
இலவச ஓட்டுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
இலவச ஓட்டுநர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மார் 13, 2025 11:58 PM
சென்னை:நான் முதல்வன் திட்டத்தின் கீழ், இலவசமாக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை:
சாலை போக்குவரத்து நிறுவனம், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம், ஆகியவை இணைந்து. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், இலவசமாக இருபாலருக்கும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் பெற்று தர உள்ளன.
கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலுார், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் என, 16 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இலகு ரக வாகன உரிமம் பெற்று, ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். ஆர்.டி.ஓ., விதிகள்படி உடல் தகுதி இருக்க வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதள முகவரியில், 'ஆட்டோமோட்டிவ்' என்ற பிரிவை தேர்ந்தெடுத்து, 'வர்த்தக வாகன ஓட்டுநர் பயிற்சி நிலை IV' என்ற பாடத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.