/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டுகோள் இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டுகோள்
இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டுகோள்
இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டுகோள்
இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 13, 2025 11:59 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, சின்ன நாரசம்பேட்டை பகுதியில், காஞ்சிபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையையொட்டி நீர்வரத்து கால்வாய் செல்கிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், நிலைத் தடுமாறி நீர்வரத்து கால்வாயில் விழாமல் இருக்க, சில ஆண்டுக்கு முன் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது.
கடந்தாண்டு, 'பெஞ்சல்' புயலின்போது ஏற்பட்ட மழையினால், இந்த சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்தது.
அப்போது, சாலையோர தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு, மழைநீர் அருகிலுள்ள நீர்வரத்து கால்வாயில் விடப்பட்டது. இந்நிலையில், இடிக்கப்பட்ட சாலையோர தடுப்புச்சுவர் இதுவரைக்கும் கட்டப்படவில்லை.
எனவே, இடிக்கப்பட்ட சாலையோர தடுப்புச்சுவரை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.