ஏழு நாட்களில் முடியுது மீன்பிடி தடைக்காலம்; படகுகள் சுறுசுறு
ஏழு நாட்களில் முடியுது மீன்பிடி தடைக்காலம்; படகுகள் சுறுசுறு
ஏழு நாட்களில் முடியுது மீன்பிடி தடைக்காலம்; படகுகள் சுறுசுறு
ADDED : ஜூன் 07, 2024 07:18 PM

ராமேஸ்வரம்:மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் ஏழு நாட்களே உள்ளதால், ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகுகளை புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில், 8,000த்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடக்கிறது.
இந்நிலையில் மீன்பிடிக்க தடைக்காலம் முடிய இன்னும் ஏழு நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளின் இன்ஜின் பழுது, சேதமடைந்த மரப்பலகையை சரி செய்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புதிய வலைகள் வடிவமைப்பு, மீன்பிடி தளவாட பொருள்களை படகில் ஏற்றுதல் என பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.