தந்தை வெட்டி கொலை மனநிலை பாதித்த மகன் கைது
தந்தை வெட்டி கொலை மனநிலை பாதித்த மகன் கைது
தந்தை வெட்டி கொலை மனநிலை பாதித்த மகன் கைது
ADDED : ஜூன் 03, 2024 06:33 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆணையாங்குப்பம் புதுத்தெருவை சேர்ந்தவர் பூராசாமி, 70; இவரது, மகன் மகேஷ், 35; மனநிலை பாதிக்கப்பட்டவர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வருகிறார். நேற்று, மாலை 5:00மணியளவில், சமையல் சரியில்லை என, தந்தை பூராசாமியிடம் மகேஷ் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த மகேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பூராசாமியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் பூராசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்த, பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ பூரசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மகேஷை கைது செய்தனர்.