கீழடி, கொந்தகை, கீழ்நமண்டி உட்பட 8 இடங்களில் அகழாய்வு துவக்கம்
கீழடி, கொந்தகை, கீழ்நமண்டி உட்பட 8 இடங்களில் அகழாய்வு துவக்கம்
கீழடி, கொந்தகை, கீழ்நமண்டி உட்பட 8 இடங்களில் அகழாய்வு துவக்கம்

எத்தனை கட்டம்?
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அருகில் உள்ள தொல்லியல் தளமான கொந்தகையில், 10ம் கட்டம்; விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்டம்; திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டியில் இரண்டாம் கட்டம்; புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு முன் என்னென்ன கிடைத்தன... விஜயகரிசல்குளம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நேற்று துவங்கியது.
சென்னானுார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கரில் பழங்கால பானையோடுகள் அதிகம் உள்ளன. இங்கும், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானையோடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான, சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்கள் அதிகளவில் உள்ளன.
கொங்கல் நகரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல் நகரம், எஸ்.அம்மாப்பட்டி, சோமவாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, பல்வேறு தொல்லியல் பொருட்கள், வரலாற்று ஆய்வாளர்களின் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன.
திருமலாபுரம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் அருகே திருமலாபுரம் கிராமத்தில், குலசேகரப்பேரி கண்மாய் அருகே சாலை அமைக்க மண் எடுக்கப்பட்டது.
மருங்கூர்
கடலுாரில் இருந்து 32 கி.மீ., தொலைவில், மருங்கூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து கீழக்கொல்லை செல்லும் சாலையின் வடக்கு பகுதியில், 4 ஏக்கரில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது. இங்கு, வெளிர்சாம்பல் நிற ரவுலட் மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.