திண்டுக்கல் மருத்துவமனைகளில் எத்தனால் பயன்பாடு: மதுவிலக்கு போலீசார் ரெய்டு
திண்டுக்கல் மருத்துவமனைகளில் எத்தனால் பயன்பாடு: மதுவிலக்கு போலீசார் ரெய்டு
திண்டுக்கல் மருத்துவமனைகளில் எத்தனால் பயன்பாடு: மதுவிலக்கு போலீசார் ரெய்டு
ADDED : ஜூன் 20, 2024 10:46 PM

திண்டுக்கல்:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியான சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல்லில் மருத்துவமனை ஆய்வகங்களில் எத்தனால்'பயன்பாடுகள் குறித்து மது விலக்கு போலீசார் தீவிரமாக நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக கல்லுாரிகளில் உள்ள ஆய்வகங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேலானோர் இறந்தனர். சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகி கண்பார்வை இழந்து சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கள்ளச்சாராயத்தில் போதைக்காக 'மெத்தனால்', 'எத்தனால்' எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில் எத்தனால் எனும் வேதிப்பொருள் மருத்துவமனைகள், கல்லுாரிகளில் செயல்படும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலமாகவும் கள்ளச்சாராய தயாரிப்புகள் நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மருத்துவமனைகள், கல்லுாரிகளில் மது விலக்கு போலீசார் எல்லா மாவட்டங்களிலும் அதிரடியாக ரெய்டு நடத்தமுடிவு செய்துள்ளனர்.