'நுழை, நட, ஓடு, பற...' வாசிப்பு திறனை மேம்படுத்த தயாராகுது புதிய புத்தகங்கள்
'நுழை, நட, ஓடு, பற...' வாசிப்பு திறனை மேம்படுத்த தயாராகுது புதிய புத்தகங்கள்
'நுழை, நட, ஓடு, பற...' வாசிப்பு திறனை மேம்படுத்த தயாராகுது புதிய புத்தகங்கள்
ADDED : ஜூன் 03, 2024 05:51 AM

சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, 'நுழை, நட, ஓடு, பற' என்ற தலைப்புகளில், புத்தகங்களை உருவாக்க உள்ளதாக, கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பாடத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பாடத்திட்டம் சாராத பல்வேறு செயல்முறைகளை, பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
இந்த வரிசையில், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, நான்கு தலைப்புகளில் புத்தகங்கள் உருவாக்க உள்ளதாக, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகமான, சமக்ர சிக் ஷா அறிவித்துள்ளது.
இதன்படி, நுழை, நட, ஓடு, பற என்ற தலைப்புகளில், செயல்வழி மற்றும் ஆர்வமூட்டும் வாசிப்பு புத்தகங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நுழை என்ற புத்தகத்தில் மாணவர்கள் மெதுவாக வாசிக்க துவங்கும் வகையிலான அம்சங்கள் இடம் பெற உள்ளன. அதன்பின், படிப்படியாக வாசித்தலை அதிகரிக்கும் அம்சங்களை, அடுத்தடுத்த புத்தகங்களில் இடம் பெற வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கான கருத்துருக்களை, ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் வழங்கலாம் என்றும், மாணவர்களின் கதை, கவிதை, கட்டுரை, படங்கள் போன்றவற்றை, புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம் எனவும், சமக்ர சிக் ஷா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.