தினமும் அம்மன் குழந்தை வேணுமா...3
தினமும் அம்மன் குழந்தை வேணுமா...3
தினமும் அம்மன் குழந்தை வேணுமா...3
ADDED : ஜூலை 19, 2024 12:59 AM

குழந்தை இல்லாதவர்களின் வேதனை சொல்லி மாளாது. அக்குறையை ஈரோடு மாவட்டம் நஞ்சமடைக்குட்டை கருமாரியம்மன் தீர்க்கிறாள். இவளை ஆடிவெள்ளியன்று தரிசிப்பது விசேஷம்.
வேப்ப மரத்தடியில் கருமாரியம்மன் சிலையை வைத்து சிலர் வழிபட்டு வந்தனர். நாளடைவில் அது கோயிலாக உருவானது. நாகதோஷம் உள்ளவர்கள் அம்மனுக்கு பால் அபிேஷகம் செய்கின்றனர். ராகு காலத்தில் வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தொல்லை குறையும்.
திருமணம் நடக்கவும், குழந்தை வரம் பெறவும் அமாவாசை, வெள்ளி அன்று
சிறப்பு பூஜை நடக்கிறது. அம்மன் அருளால் குழந்தை பெற்றவர்கள் மாசித் திருவிழாவன்று பொங்கல் வைக்கின்றனர். விநாயகர், கன்னிமார் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது
ஈரோட்டில் இருந்து அந்தியூர் வழியாக 40 கி.மீ.,
நேரம் காலை 9:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு
93606 79386