அ.தி.மு.க.,வை கவிழ்த்த தி.மு.க..,
அ.தி.மு.க.,வை கவிழ்த்த தி.மு.க..,
அ.தி.மு.க.,வை கவிழ்த்த தி.மு.க..,
ADDED : ஜூன் 06, 2024 03:02 AM

தேனி:தேனி லோக்சபா தொகுதியில் நடந்த 17 தேர்தல்களில் தி.மு.க., எம்.பி., தங்க தமிழ்செல்வன் 5,71,493 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., சாதனையை முறியடித்துள்ளார்.
1950 முதல் பெரியகுளம் லோக்சபா தொகுதியாக இருந்த தேனி, 2009ல் மறுசீரமைக்குப் பின் தேனி தொகுதி உருவானது. இங்கு 1950 முதல் 2019 வரை நடந்த 17 லோக்சபா தேர்தல்களில் அ.தி.மு.க., 8, காங்., 5, தி.மு.க., 2 முறை, சுதந்திரா கட்சி, இந்திய முஸ்லீம் கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. 2014ல் வெற்றி பெற்ற முன்னாள் அ.தி.மு.க.,எம்.பி., பார்த்திபன் 5,71,264 ஓட்டுக்கள் பெற்று தொகுதியில் அதிக ஒட்டு பெற்று முதலிடத்தில் இருந்தார். இந்த தேர்தலில் தி.மு.க., தங்கதமிழ்செல்வன் 5,71,493 ஓட்டுக்கள் பெற்றார். முன்னாள் எம்.பி., பார்த்திபன் பெற்ற ஓட்டுக்களை விட 229 ஓட்டுக்கள் அதிகம். கூடுதல் ஓட்டு பெற்ற எம்.பி., என்ற சிறப்பை பெற்றார்.