பா.ஜ.,வில் இருந்து அஞ்சலை நீக்கம்
பா.ஜ.,வில் இருந்து அஞ்சலை நீக்கம்
பா.ஜ.,வில் இருந்து அஞ்சலை நீக்கம்
UPDATED : ஜூலை 18, 2024 10:07 PM
ADDED : ஜூலை 18, 2024 10:03 PM

சென்னை: பா.ஜ.க.,வின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கரு.நாகராஜன் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்ததாக தேடப்பட்டு வரும் அஞ்சலை பா.ஜ,,வில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக தலைமறைவாகி உள்ள அஞ்சலை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்ததுடன் உளவு பார்க்கும் வேலையிலும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.