Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ குடியிருப்புகள் பாதிப்பு 36 பேர் முகாமில் தஞ்சம்

குடியிருப்புகள் பாதிப்பு 36 பேர் முகாமில் தஞ்சம்

குடியிருப்புகள் பாதிப்பு 36 பேர் முகாமில் தஞ்சம்

குடியிருப்புகள் பாதிப்பு 36 பேர் முகாமில் தஞ்சம்

ADDED : ஜூலை 19, 2024 05:29 PM


Google News
Latest Tamil News
பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று, பந்தலுாரில், 104 மி.மீ., சேரங்கோடு 126 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இரவில் கொட்டி தீர்த்த கனமழையால், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

சேரம்பாடி அருகே திருவள்ளுவர் நகர் என்ற இடத்தில், சரிவான பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில், குஞ்சம்மா என்பவரது வீட்டின் பின்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு, குடியிருப்பு பாதிக்கப்பட்டது. அதை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளிலும், பூமியில் விரிசல் ஏற்பட்டு மண் சரிவு ஏற்படும் அபாய நிலை உள்ளது. மேட்டுப்பாங்கான பகுதிக்கு செல்லும் நடைபாதைகளும் இடிந்ததால், இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கவுரி, வி.ஏ.ஓ. யுவராஜ் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று, 13 வீடுகளை காலி செய்து, 36 பேரை சேரம்பாடி அரசு நடுநிலை பள்ளியில், தற்காலிக முகாமில் தங்க வைத்தனர். இவர்களுக்கு தேவையான தற்காலிக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதுடன், மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரிய அளவிலான மண்சரிவு அபாயம் உள்ளது. எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வேறு பகுதியில் இடம் ஒதுக்கி, வீடுகளை கட்டித்தர வேண்டும்' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதிகளை விரைவில் முழுமையாக ஆய்வு செய்து, அனைவருக்கும் பாதுகாப்பான பகுதிகளில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us