/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஊராட்சி அலுவலகத்திற்கு முன் ஒப்பாரி வையாவூரில் மக்கள் நுாதன போராட்டம் ஊராட்சி அலுவலகத்திற்கு முன் ஒப்பாரி வையாவூரில் மக்கள் நுாதன போராட்டம்
ஊராட்சி அலுவலகத்திற்கு முன் ஒப்பாரி வையாவூரில் மக்கள் நுாதன போராட்டம்
ஊராட்சி அலுவலகத்திற்கு முன் ஒப்பாரி வையாவூரில் மக்கள் நுாதன போராட்டம்
ஊராட்சி அலுவலகத்திற்கு முன் ஒப்பாரி வையாவூரில் மக்கள் நுாதன போராட்டம்
ADDED : ஜூலை 19, 2024 05:30 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில், மொத்தம் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சி தலைவராக காமராஜ் என்பவர் உள்ளார்.
நேற்று, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து, துணைத் தலைவர் மற்றும் ஏழு வார்டு உறுப்பினர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின், ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு, மலர் மாலை அணிவித்து, கற்பூர தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, பெண்கள் ஒன்றாக கூடி அமர்ந்து, ஒப்பாரி வைத்து நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
பின், ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்யாததாலும், அவரவர் வார்டுகளில் வார்டு உறுப்பினர் செய்த பணிகளுக்கு உரிய தொகையை வழங்காததை கண்டித்தும் கூச்சலிட்டனர்.
ஆக., 15ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை, கொளம்பாக்கத்தில் நடத்த வேண்டும் என, அனைத்து வார்டு உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
பின், ஊராட்சி தலைவரின் மனைவியான கலைவாணி என்ற ஒப்பந்ததாரருக்கு, எந்தவித பணிக்கான டெண்டரும் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, ஊராட்சி தலைவர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதனால், வையாவூர் ஊராட்சி அலுவலகத்தில், பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்தி, கிராம மக்களை கலைந்து போகச் செய்தனர்.