புத்த மதத்தினரை கணக்கெடுங்க! கூட்டமைப்பு வலியுறுத்தல்
புத்த மதத்தினரை கணக்கெடுங்க! கூட்டமைப்பு வலியுறுத்தல்
புத்த மதத்தினரை கணக்கெடுங்க! கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஜூன் 18, 2024 06:09 AM

ஆத்துார் : 'மக்கள்தொகை கணக்கெடுப்பில், புத்த மதத்தினர் குறித்து கணக்கெடுப்பு செய்வதுடன், அரசு தேர்வுகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்டவைகளில், புத்த மதம் என குறிப்பிட வேண்டும்' என, தென்னிந்திய புத்த கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துாரில் நேற்று புத்த கூட்டமைப்பு தலைவரும், மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினருமான மவுரிய புத்தா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆசிய அளவில், ஒரே கல்லில் செய்யப்பட்ட, மிகப்பெரிய புத்தர் சிலை தலைவாசல் தியாகனுாரில் உள்ளது. ஆத்துார், வீரகனுார், சேலம் ஆகிய இடங்களில் உள்ள புத்தர் சிலைகள் பார்ப்பதற்கு, பல்வேறு நாடுகளில் இருந்து வருகின்றனர்.
தியாகனுாரில் விவசாய நிலத்தில் கிடந்த 5ம் நுாற்றாண்டு கால புத்தர் சிலை குறித்து, பத்திரிக்கை செய்தி மூலம் அறிந்து, அவற்றை சேலம் கலெக்டர் மீட்டெடுத்து, தன்னார்வலர்கள் மூலம் தியான மண்டபம் அமைத்துள்ளனர்.
புத்த மதத்தை தழுவியவர்களுக்கு ஜாதி சான்று தடையின்றி வழங்க வேண்டும். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என்று ஜாதி சான்றிதழில் குறிப்பிடுவது போல, புத்தம், சமணம் என்று குறிப்பிடுதல் வேண்டும்.
கடந்த, 2011 மற்றும் அதற்கு முன் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில், தமிழகத்தில் வசித்து வரும், 2 லட்சம் புத்த மதத்தினர் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளவில்லை.
வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.