தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து போதைப்பொருள் * சொல்கிறார் காங்., தலைவர் செல்வ பெருந்தகை
தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து போதைப்பொருள் * சொல்கிறார் காங்., தலைவர் செல்வ பெருந்தகை
தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து போதைப்பொருள் * சொல்கிறார் காங்., தலைவர் செல்வ பெருந்தகை
ADDED : ஜூலை 18, 2024 11:21 PM
அவனியாபுரம்:''தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து தான் போதை பொருள் வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து குஜராத்திலிருந்து போதைப்பொருள் வருவதை தமிழக கவர்னர் ரவி தடுக்க வேண்டும்,'' என, மதுரையில் காங்., மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின் உத்தரவு மற்றும் அழுத்தத்தினால்தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முதல்வர் ஸ்டாலின் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி காங்., நிர்வாகி ஜெயக்குமார் கொலையில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. காவல் துறையின் மீது நம்பிக்கை உள்ளது. விசாரணையில் நாம் தலையிடக்கூடாது. என்ன நடக்கிறது என்பதை எங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியுள்ளனர். விரைவில் உண்மை வெளிவரும்.
ஓய்வு பெற்ற நீதிபதியைக்கூட பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்த வெறுப்பு அரசியலை, தமிழக மக்கள் என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீரை கொடுக்க வேண்டியது கர்நாடகா அரசின் கடமை. அவர்கள் மறுக்கிறார்கள் என்றால் இதனை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். பிரதமர் மோடி தலையிட்டு தான் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.