Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கேரளாவில் அடிவாங்கிய கம்யூனிஸ்ட் தமிழகத்தில் 4 தொகுதிகளை அள்ளியது * கூட்டணி சவாரியால் தொடருது குதுாகலம்

கேரளாவில் அடிவாங்கிய கம்யூனிஸ்ட் தமிழகத்தில் 4 தொகுதிகளை அள்ளியது * கூட்டணி சவாரியால் தொடருது குதுாகலம்

கேரளாவில் அடிவாங்கிய கம்யூனிஸ்ட் தமிழகத்தில் 4 தொகுதிகளை அள்ளியது * கூட்டணி சவாரியால் தொடருது குதுாகலம்

கேரளாவில் அடிவாங்கிய கம்யூனிஸ்ட் தமிழகத்தில் 4 தொகுதிகளை அள்ளியது * கூட்டணி சவாரியால் தொடருது குதுாகலம்

ADDED : ஜூன் 06, 2024 02:46 AM


Google News
மதுரை:கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டை என தோழர்களால் கொண்டாடப்படும் கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற கம்யூ.,கட்சிகள், கூட்டணி சவாரியால் தமிழகத்தில் 4 தொகுதிகளை அப்படியே அள்ளியுள்ளது.

தேசிய கட்சிகள் என்றாலும் மாநிலத்திற்கு மாநிலம் மாற்று சித்தாந்தத்துடன் கூட்டணி வைத்து களம் இறங்கி வரும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., கட்சிகளின் ஓட்டு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் சரிவை சந்தித்து வருகிறது. ஆனாலும் கூட்டணி பலத்தில் அதை சரி செய்யும் அரசியலில் பயணிக்கும் இக்கட்சிகள், 2024 லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மோடிக்கு எதிராக உருவான 'இன்டியா' கூட்டணியில் ஒட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்தின. ஆனாலும் தேசிய அளவில் இந்திய கம்யூ., 2, மார்க்சிஸ்ட் 4 என மொத்தமே 6 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது. அதில் 4 தொகுதிகள் தமிழகத்தில் இருந்து கிடைத்தவை.

கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியில் உள்ள கேரளாவில், மொத்தமுள்ள 20 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ., ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றியடைய முடிந்தது. இதுபோல் ராஜஸ்தானில் ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் கைப்பற்றியது. இ.கம்யூ., தமிழகத்தில் 2 தொகுதிகள் தவிர வேறு மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: கம்யூ., கட்சிகளை தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் தலையில் துாக்கி வைத்து கொண்டாடுகின்றன. அக்கட்சியின் ஓட்டு வங்கியை பார்த்து பிற மாநிலங்களில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கி வருகின்றன.

ஆனால் தமிழகத்தில் 4 தொகுதிகளை தி.மு.க., அள்ளிக் கொடுத்துள்ளது.

இதில் மார்க்சிஸ்ட் சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்ட சச்சிதானந்தம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் வெங்கடேசன் 2,08,995 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இ.கம்யூ., சார்பில் நாகபட்டினத்தில் செல்வராஜ் 2,08,957 ஓட்டுகள், திருப்பூரில் சுப்பராயன் 1,25,928 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி வித்தியாச ஓட்டுக்களுக்கு காரணம் தி.மு.க., ஓட்டுக்களே. கம்யூ.,க்களுக்கு ஆளுக்கொரு தொகுதி ஒதுக்கி விட்டு மீதி 2 ல் தி.மு.க., போட்டியிட்டிருந்தால் எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். இண்டியா கூட்டணியில் தி.மு.க.,வுக்கு 4 ம் இடம் தான் உள்ளது, என அக்கட்சியினருக்கே ஆதங்கம் உள்ளது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us