/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
ADDED : ஜூன் 06, 2024 02:47 AM
விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சாமிகள் அருள்பாலித்தனர்.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.