அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.3.07 கோடி உண்டியல் வசூல்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.3.07 கோடி உண்டியல் வசூல்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.3.07 கோடி உண்டியல் வசூல்
ADDED : ஜூன் 04, 2024 01:39 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து விட்டு, கோவிலில் வைத்துள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
அதன்படி வைகாசி மாதத்தில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், 3.07 கோடி ரூபாய், 360 கிராம் தங்கம், 2,092 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.