நிலக்கரி முறைகேடு விசாரணை துவக்கம்
நிலக்கரி முறைகேடு விசாரணை துவக்கம்
நிலக்கரி முறைகேடு விசாரணை துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 01:27 AM
சென்னை:கடந்த, 2012 - 2016 அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக, கவுதம் அதானி நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது.
அந்நிறுவனம், டன் 2,300 ரூபாய்க்கு வாங்கிய நிலக்கரியை, 7,600 ரூபாய்க்கு தமிழக மின்வாரியத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, சென்னையை சேர்ந்த இயக்கம், 2018ல், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தது.
புகாரை விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பெண் எஸ்.பி., ஒருவர் தலைமையில், முதற்கட்ட விசாரணை துவங்கி உள்ளது.