அமைச்சர் அன்பரசனுக்கு முதல்வர் பாராட்டு
அமைச்சர் அன்பரசனுக்கு முதல்வர் பாராட்டு
அமைச்சர் அன்பரசனுக்கு முதல்வர் பாராட்டு
ADDED : மார் 12, 2025 05:55 AM
செங்கல்பட்டு மாவட்ட அரசு விழாவை, மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த, மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பரசனை மனதார பாராட்டுகிறேன். அவர் ஏராளமான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை உருவாக்கி, தமிழகத்தின் சிறுதொழில் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வரக்கூடியவர். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் இருக்கிறது என்றால், அதில் அன்பரசனின் பங்கும் இருக்கிறது. அவருடைய அமைதியான அக்கறையான, உண்மையான உழைப்பின் வாயிலாக, தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதேபோல, தமிழக தொழில் துறையில், பெண்கள் அதிக அளவு பணியாற்றுவதற்கும், அவரது துறை முக்கிய பங்காற்றி வருகிறது. அத்தகைய அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக வளர்த்து வருகிறார். அவருக்கும், கலெக்டர் அருண்ராஜ், மாவட்ட நிர்வாகத்துக்கும், அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவருக்கும், என் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.