அமைச்சர் நியமனத்தில் மத்திய அரசு துரோகம்
அமைச்சர் நியமனத்தில் மத்திய அரசு துரோகம்
அமைச்சர் நியமனத்தில் மத்திய அரசு துரோகம்
ADDED : ஜூன் 18, 2024 04:38 AM

மத்திய, மாநில அரசுகள், காவிரி மற்றும் மேகதாது பிரச்னையில், தொடர்ந்து கபட நாடகம் ஆடுகின்றன. தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொடர்ந்து துரோகம் செய்வதையே, தி.மு.க., அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்து வந்தன. போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசும், கங்கணம் கட்டிக் கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் நடுநிலையாக இருந்து, பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய பா.ஜ., அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோமண்ணாவை, மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது, தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,