காவிரி நீர்: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை: மயிலாடுதுறையில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
காவிரி நீர்: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை: மயிலாடுதுறையில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
காவிரி நீர்: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை: மயிலாடுதுறையில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
ADDED : ஆக 01, 2024 08:23 PM

காவரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.75 லட்சம் கன அடியாக இருப்பதால் நாமக்கல் மாவட்ட காவரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.32 லட்சம் கனஅடியாக உள்ளது. காவிரியில் இருந்து 35,900 கன அடியாகவும் கொள்ளிடத்தில்இருந்து96,200 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
காவிரியில் நீராட தடை
குமாரபாளையம் பெருமாள்கோயில்,மோகனூர் அசலதீபேஸ்வர் வேலூர் காசிவிஸ்வநாதர் கோயில்,ஜமின் இளம்பள்ளி உமாமகேஸ்வரர் கோயில், கொத்தமங்கலம்,தேவராயசமுத்திரம் காசி விஸ்வநாதர் கோயில்களில்ஆக.,3 மற்றும் 4-ம் தேதிகளில் நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு
கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து மயிலாடுதுறையயில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது, மாவட்ட கலெக்டர் , காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பொது மக்கள் 1077, 04364-240100, 9442626792 எண்களில் தொடர்பு கொண்டால் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே ஒகேனக்கல் காவரியில் நீர் வரத்து 2.05 கன அடியில் இருந்து 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்து உள்ளது.