கார் கவிழ்ந்து விபத்து; சென்னை தம்பதி பலி
கார் கவிழ்ந்து விபத்து; சென்னை தம்பதி பலி
கார் கவிழ்ந்து விபத்து; சென்னை தம்பதி பலி
ADDED : ஜூன் 03, 2024 04:03 AM
மணப்பாறை : சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சசிதரன், 41; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரது மனைவி ராஜஸ்ரீ, 40. இவர்களது மகள் ருதிஷா, 13. மூவரும் நேற்று முன்தினம் பூந்தமல்லியில் இருந்து பழனிக்கு சான்ட்ரோ காரில் சென்றனர். காரை சசிதரன் ஓட்டினார்.
நேற்று காலை அவர்கள் திருச்சி - திண்டுக்கல் சாலையில், மணப்பாறை அருகே உள்ள முத்தபுடையான்பட்டி என்ற இடத்தில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதியது. இதில், காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்து, மூவரும் பலத்த காயமடைந்தனர். காருக்குள் சிக்கியவர்களை கிராம மக்கள் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், சிகிச்சை பலனின்றி சசிதரன், ராஜஸ்ரீ இறந்தனர். ருதிஷா மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணப்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.